சாயி தியானம்

சாயி தியானம்

பாபாவின் அறிவுரைகளும், பயிற்சி முறைகளும் வித்தியாசமானவை. குறிப்பிட்ட வரையறை அல்லது இலக்கணம் இல்லாதவை. இதற்கு முன் எப்போதும் இல்லாத வரையிலானது. சிலருக்கு நேரடியாக அளித்தார். சிலருக்கு மறைமுகமாக குறிப்பால் அளித்தார். ஒரு சிலருக்கு கனவில் தோன்றி காட்சிகளாய் தந்தார். குரு பிரம்மா  போன்ற மந்திரங்களையும் உபதேசித்தார். ஹடயோகம் பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவரை அதை அப்படியே நிறுத்தும் படியும், பொறுமையே அதையும் விட முக்கியமானது என்றும் அறிவுரை கூறியும் இருக்கிறார்.
    அப்படி பாபா எனக்கு தனிப்பட்ட முறையில் ஆசி கூறியிருப்பதே சாயி தியானம்! பாபாவின் பரிபூரண ஆசிர்வாதத்தின் அடிப்படையிலேயே, பாபா தியானம் பற்றி போதிக்கவில்லை என்றாலும் தியானம், யோகம் ஆகியவற்றில் தான் பெரும்பாலும் இருந்தார். அந்த வகையில் அவரை மனதில் நிறுத்தி தியானம் செய்வது பொருத்தமான ஒன்றே. அதுவே ஷிர்டி சாயி தியானம். ஷிர்டி சாயி தியான பீடம்’’ என்று ஸ்ரீ சாயி மார்க்கம் இதழ்களில் அண்மைக் காலமாக எழுதி வருகிறேன்.
    ஆனாலும், இது எப்படி சாத்தியம்? இதற்கு என்ன வடிவம்? திடீரென்று சாயி தியானம் என்று கூறிவிட்ட பிறகு அதற்கு யாரேனும் விளக்கம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்றெல்லாம் உள்ளூர ஒரு கவலை ரேகை ஓடிக் கொண்டே தான் இருந்தது.
    இன்னொரு பக்கம் அந்தர் முகமாக அதாவது அகவயகமாக சாயி தியானம் பற்றிய புத்தெழுச்சி எனக்குள் மிக அழுத்தம் பெற்றதாக உணர்வு பெற்றேன்.
    காஞ்சிபுரம் தியான யக்னத்தில் சுபாஷ்பத்ரிஜி எனக்குள் ஏற்றிவிட்ட தியானத் தீ இப்போது சாயி தியானமாக புதுவடிவம் பெற்றிருக்கிறது.
    எல்லாவற்றையும் விட சாயியின் சம்மதம் இதற்கு மிக முக்கியம். சாயியின் அனுமதி இன்றி இது சாத்தியம் இல்லை.
    சாயியின் சம்மதம் கிடைக்குமா? கிடைக்காதா? கிடைத்தால் எப்படி கிடைக்கும்? என்றெல்லாம் பல்வேறு குழப்ங்களுக்கிடையே, இம்மத இலக்கியப் பீடம் கட்டுரை எழுத உட்கார்ந்த போது, வார்த்தைகள் ஒவ்வொன்றும் வரிக்கு வரி சம்பந்தம் இல்லாமல் தாவித்தாவி தியானம் என்ற ஒன்றையே சுற்றிச் சுற்றி வந்தது.
    நினைத்ததை எழுத முயைhமல், எழுத வந்ததை நினைக்கும்படி ஆனது. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத படிக்கு, சாயி சத்சரித்திரத்தில் இருந்து சாயி தியானம் தொடர்பான அனேக விஷயங்கள் ஆசிர்வாதங்களாக, வழிகாட்டுதல்களாக, உபதேசங்களாக, பயிற்சியாக கிடைத்தன.
    பாபா தியானம் பற்று போதிக்கவில்லை’’ என்று நா அண்மையில் எழுதிய வரிகள் எந்த அளவிற்கு தவறானவை என்று நான் மனம் வருந்தி கலங்கம் அளவிற்கு பாபா தியானம் பற்றியே அதிகம் அதில் போதித்திருக்கிறார்.

சாயிதியானம் பற்றிய சத்சரித்திர வரிகள்...
    
ஷிர்டியில் பாபா பதினாறு வயது இளைஞனாக தாமே ஒரு வேப்பமரத்தடியில் தோன்றிய போது பிரம்மஞானத்தால் நிரம்பியவராக காணப்பட்டார். முக்தி அவரது பாதங்களில் பணி செய்தது. வேப்பமரத்தடி ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு அவர் முதன் முதலாக காட்சி தந்தார்.
    ஷிர்டியைச் சேர்ந்த நானா சோப்தாரின் வயதான தாயார், """"ஷிர்டியில் ஒரு நாள் ஒரு அடியவரிடம் கண்டோபா சாமி பிடித்துக் கொண்டது. அவரிடம் பாபாவைப் பற்றி விவரம் கேட்டதற்கு, பாபா பன்னிரெண்டு ஆண்டுகள் அவ்விடத்தில் யோகப்பயிற்சி செய்ததாக அருள்வாக்கு கூறினார்’’ என்று கூறியிருக்கிறார்.
    பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார். அங்கு தம்மை அவர் ஆசுவாசப் படுத்திக் கொண்டார். எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார். சில சமயங்களில் குளித்தும் மற்ற நேரங்களில் குளிக்காமலும் இருந்தார்’’.
    பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார். தவ்தியும், கண்டயோகமும் அவற்றில் முக்கியமானவை. அவரது திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அன்றி ஊகிக்கவும் இல்லை’’.
    வேத அறிவை ஒத்த விறுவிறுப் புன்னதும் அறுவூட்டுவதுமான சாயிபாபாவின் அறிவுரைகள் எல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அவர்கள் கோரும் பிரம்மத்துடன் ஐக்கியமாதல், அஷ்டாங்க யோகம், தியானப் பேரின்பம் ஆகியவற்றைப் பெற முடியும்’’.
    சாயி பாபாவின் கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும். பாபாவின் கதைகளை மரியாதையுடன் கேட்டு அவற்றை எண்ணி தியானம் செய்து கிரகித்துக் கொள்ளுங்கள்’’.
    சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை மற்றெல்லா நட்சத்திரங்களும் சேர்ந்தாலும் கொடுக்க முடியாது. அதைப் போலவே, பிரசங்கங்களும், புனித நூல்களும் கொடுக்க முடியாத விவேகத்தை சாயிபாபாப் போன்ற சத்குருவால் மட்டுமே தரமுடியும். அவரது அசைவுகளும், சாதாரண பேச்சும் நமக்கு மௌன உபதேசத்தை அளிக்கிறது. எப்போதும் அவர் ஆத்மாவிலேயே தன்வயப்பட்டிருந்தார்.
    அவர் அடக்கமாகவும், அசைவில்லாமலும் தியானத்திலேயே அமர்ந்திருந்தார்.
    சாயியின் ரூப தியானம். சுந்தரமான அழகு படைத்த சாயி மசூதியின் விளிம்பில் நின்று கொண்டு உதியை ஒவ்வொரு பக்தருக்கும் அவரவர் நன்மையை கருத்தில் கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.’’
    நிர்குணவழிபாடு, சகுண வழிபாடு இரண்டாலும் இறைவனை அடையலாம். நிர்குணம் உருவமற்ற அருவ வழிபாடு. சகுணம் என்பது உருவத்துடன் கூடிய வழிபாடு. உருவ வழிபாடே உருவமற்ற நிர்குணத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
    உருவம், யாக குண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிராமணர் ஆகிய ஏழு பொருட்களைவிடவும் சத்குருவின் உருவமே உயர்வானது. சத்குருவான சாயி எங்கும் வியாபித்திருக்கிறார்.’’
    நமது வாழ்வின் குறிக்கோளை அடைய நாம் எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். சிறிதளவும் காலம் தாழ்த்தக் கூடாது. நமது குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்பட வேண்டும். நமது இலக்கை அடைய ஊக்கத்தோடும், முழு வேகத்தோடும் பாடுபட வேண்டும். சோம்பேறித்தனத்தையும், தூக்கத்தையும் கலைத்து ஆத்ம தியானம் செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால் நம்மை நாமே மிருக நிலைக்கு தாழ்த்திக் கொண்டவர்களாகவோம்.’’
    குருவை அதாவது பாபாவை நினைக்காமல் நாம் எந்தப் பொருட்களையும் புலன் வழியே அனுபவிக்கக் கூடாது. இதனால் நம் மனம் பாபாவால் நிறைந்து விடும். பாபாவின் தியானம் விரைவில் வளரும். பாபாவின் சகுண ரூபம் எப்போதும் நம் கண் முன்னே இருக்கும். அத பிறகு, பக்தி, பற்றின்மை, முக்தி எல்லாமே நம் இஷ்டம் தான்.
    பாபாவின் வாசத்தால் ஷிர்டி ஒரு புண்ணிய க்ஷேத்திரமாக மாறியது. எல்லா திசைகளில் இருந்தும் மக்கள் அங்கே குவியத் தொடங்குகிறார்கள். ஏழைகளும், பணக்காரர்களும் பாபாவின் ஏதோ ஒரு ரூபத்தில் பலன் பெற்றனர். பாபாவின் எல்லையற்ற தன்மையையும், இயற்கையான ஞானத்தையும், அவரது எங்கும் நிறை தன்மையையும் யாராலும் விவரிக்க இயலாது. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இவை அனைத்தையுமோ உணர்ந்து அனுபவிக்க முடிந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
    பாபா பல நேரங்களில் மௌனமாக இருந்தார். ஒரு வகையில் அவரது மௌனமே பிரம்மத்தைப் பற்றிய அவரது நீண்ட விளக்கமாகும்.

சாயி தியானம் பற்றிய சாயியின் போதனை

    உனது கட்டுப் பிரம்மத்தை (அதாவது பணத்தாசையை) சுருட்டிக் கொள்க. உன் போராசையை நீ முழுமையாக விட்டொழித்தால் ஒழிய உண்மையான பிரம்மத்தை உன்னால் அடைய முடியாது. செல்வம், மக்கள், சுபிட்சம் ஆகிய கவனங்களை உடைய மனிதன் அவற்றின் மீதான பற்றுகளை உடைய போது எப்படி பிரம்மத்தை அடைய முடியும்? பற்றெனும் மாயத்தோற்றம், அல்லது பணத்தாசை எனும் இறுமாப்பு, பெருமை என்கிற முதலைகள் நிறைந்த துன்ப பெருநீர்ச் சுழியே. பேராசையும், பிரம்மமும் எதிரெதிர் துருவங்கள். அவைகள் நிரந்தரமாக ஒன்றுக் கொன்று முரண்பட்டவை. பேராசை உள்ள இடத்தில் பிரம்மத்தைப் பற்றிய எண்ணத்திற்கோ, தியானத்திற்கோ இடமில்லை. பராசை உள்ளவனுக்கு அமைதி இல்லை. திருப்தி இல்லை. மனஉறுதியும் இல்லை. எள்ளளவு பேராசை மனதளவில் இருந்தாலும் அதனால் தியான முயற்சிகள் எல்லாம் பயனற்றே போகும். அவன் ஞானியாக இருந்தும் ஒரு பலனும் இல்லை. அஹங்காரம் நிறைப் பெற்று புலன் உணர்வுகள் சார்ந்தவனுக்கு குருவின் போதனைகள் கூடப் பயன் தராது.  மனத்தூய்மையே இங்கு முக்கியம். மனத் தூய்மையின்றி தியானமோ ஆத்மிக சாதனையோ கை கூடாது.
    எனது குருவிடம் நான் தஞ்சமாக பனிரெண்டு ஆண்டுகள் இருந்தேன். அவர் முழுமையான அன்புடையவராக இருந்தார். அவரே அன்புன் அவதாரம். அவர் என்னை மிகவும் அதிகமாக விரும்பினார். அவரைப் போன்ற குரு அபூர்வமானவர். நான் அவரைப் பார்த்த போதெல்லாம் அவர் தியானத்தில் இருந்தார். அவரையே நினைத்துக் கொண்டு இருந்தேன். எனது தியானத்திற்கு அவரைத் தவிர வேறெல்லாவிதப் பொருளும் தேவையாய் இருக்கவில்லை.’’
    என் குரு என்னிடம் எதையும் எதிர்ப்பார்த்ததில்லை. அவர் என்னை ஒரு போதும் புறக்கணித்ததும் இல்லை. தாய் ஆமை தன் குட்டிகளைப் பாதுகாப்பது போல அவர் என்னை எப்போதும் காப்பாற்றி வந்தார். அவர் எனக்கு எவ்வித மந்திரத்தையும் போதிக்கவில்லை. நீங்களும் யாரிடமும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதீர்கள். என்னையே உங்களின் ஒரே குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் இன்றி பரமார்த்திகத்தை அடைவீர்கள். முழு இதயத்தோடு என்னைப் பாருங்கள். நானும் அப்படியே உங்களைப் பார்க்கிறேன்.
    எனது நிகழ்முறை தனித்தன்மை வாய்த்தது. அது பயனுள்ளது. அனுபூதி என்கிற ஆத்ம ஞானத்தை அடைய தியானம் இன்றிமையாதது. தொடர்ந்து தியானம் செய்தீர்களானால் விருத்திகள் என்கிற எண்ணங்கள் அமைதிபெறும். அனைத்து உயிர்களிலும் இருக்கிற ஆண்டவன் மேல் தியானம் செய்யுங்கள். ஆசையற்ற மனநிலையில் உணர்வுத் திரளாகிய உருவமற்ற என் இயல்பை எண்ணி எப்போதும் தியானம் செய்யுங்கள். உங்களால் என் இயல்பை எண்ண முடியாவிட்டால் இரவு, பகலை மாறி மாறிப் பார்ப்பது போல உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள எனது ரூபத்தை தியானம் செய்யுங்கள்.
    அப்போது உங்கள் எண்ணங்கள் ஓரிடத்தில் குவியும். அப்போது தியானம் செய்பவருக்கும், தியேயோ எனப்படும் தியானம் செய்யப்படும் பொருளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு மறைந்து விடும். அப்போது தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சி பெற முடியும்.

சாயி தியானத்திற்கு ஹேமாட்பந்த் காட்டிய வழி

    சத்குரு சாயி பாபாவின் பாதங்களை கழுவும் வெந்நீராக நமது ஆனந்தக் கண்ணீர் இருக்கட்டும். பரிசுத்தமான அன்பை சந்தனமாய் அவர் மேனி மேல் புசுவோம். உண்மை, நம்பிக்கை ஆகிய உடைகளை அவர்கக்க அணிவிப்போம். நமது எட்டுவிதமான உணர்ச்சிகளை அஷ்ட கமலங்களாகவும், ஒருமை மனது என்கிற கனியையும் அவருக்கு சமர்ப்பிப்போம். பக்தி என்கிற நறுமணங் கமழும் பொடியை அவர் தலைக்கு இட்டு விடுவோம். பற்று எனும் வேட்யை அவருக்கு கட்டிவிட்டு தமது தலையை அவரது திருப்பாதங்களில் வைத்து வேண்டுவோம்:
    """"எங்களது புத்தியை திசை திருப்பி விடுங்கள். அந்தர் முகமாக உள்முகமாகச் செய்யுங்கள். நித்ய, அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், அனைத்து உலகப் பொருட்களின் மீது பற்றின்மை, ஆகியவற்றை அளித்து நாங்கள் ஆத்ம உணர்வடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள். ஆன்மாவையும், உடலையும் உங்களிடம் உங்களிடம் ஒப்படைக்கிறோம். எங்களது கண்களைத் தங்களதாக்குங்கள். இதன் மூலம், இன்ப துன்பங்களை நாங்கள் உணராதிருப்போம். தங்கள் சங்கல்பப்படி எங்கள் மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள். தங்கள் திருப்பாதங்களில் எங்கள் மனம் ஆறுதல் பெறட்டும்’’.
    
    சாயிபாபாவை எப்படி தியானிப்பது? கடவுளின் தன்மையையோ, ரூபத்தையோ ஆழ்ந்தறிய யாராலும் முடியாது. வேதங்களாலும், ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனாலும் கூட அதைப் பற்றி முழுமையாக கூற முடியவில்லை. கடவுளின் வடிவத்தை தரிசிக்க மட்டுமே அடியவர்களால் முடியும். வாழ்வின் உச்சகட்ட உயர் லட்சியத்தை அடைய இறைவனின் திருப்பாதங்களைத் தியானிப்பதைத் தவிர அடியவர்களுக்கு வேறெதுவும் தெரியாது.
    ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் பதினைந்து நாட்களும் சிறிது சிறிதாகக் கழிவது போல, சந்திரனின் ஒளியும் அதே அளவில் தேய்ந்து போகிறது. அமாவாசையன்று அது முற்றிலுமாக மறைந்து போகிறது. பின்னர் வளர்பிறையின் போது, இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னரே சந்திர ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது, ஒரு மரத்தின் இரண்டு கிளைகள் நடுவே அச்சந்திர ஒளியைப் பார்ப்பது நலம். ஆர்வத்துடனும், ஒரே கவத்துடனும் கிளைக் இடையே பார்க்கும் போது வெகு தூரத்தில் உள்ள இளம்பிறை சந்திரன் அவர்களின் காட்சி எல்லைக்குள் தெரிய ஆரம்பிக்கும்.
    இதே வழிமுறையில் பாபாவின் ஒளியையும் காண முடியும். பாபாவின் தோற்ற அமைப்பை பாருங்கள். அது எவ்வளவு அதி அற்புதமாக  இருக்கிறது! பாபா இடது முழங்கால் மேல் வலது கால் போட்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறார். அவரது இடது கை விரல்கள் வலது பாதத்தில் உள்ளது. வலது கால் பெருவிரலில் அவரது ஆள்காட்டி விரலும், நடுவிரலும் உள்ளது. இக்காட்சியானது, """"நீ என் ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப் பணிவுடையவனாகவும் இருப்பாயாக; என் கால் பெருவிரலை ஆள்காட்டி விரல், நடுவிரல்; ஆகிய இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக.’’ என்று பாபா குறிப்பிடுவதாக தமக்குத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் சாயி சத்சரித்திரம் மூல ஆசிரியர் ஹேமாட்பந்த்.
    
மூன்று வேளை சாயி தியானம்

    பலராம் மங்கார் என்கிற பாபா அடியவர் தன் மனைவி காலமான பிறகு, ஷிர்டி சென்று பாபாவுடன் சேர்ந்து வாழ விரும்பினார். பாபா அவருக்கு பன்னிரெண்டு ரூபாய் கொடுத்து, ஸதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்திரகட் என்கிற ஊருக்குச் சென்று வாழும்படி வழி காட்டினார். பலராமுக்கு பாபாவைப் பிரிந்து செல்ல மனம் இல்லை. பாபாவோ சிறந்த வாழ்க்கையை அவருக்கு கொடுத்திருப்பதாக உறுதி கூறி அனுப்பி வைத்தார். அங்கே மச்சிந்திரகட்-டில் ஒரு நாளைக்கு மூன்று முறை அவர் தியானம் செய்ய வேண்டும் என்றும் பாபா கேட்டுக் கொண்டார்.
    மச்சிந்திரகட் சென்று சேர்ந்த பலராம், இயற்கை காட்சிகள், தூய காற்று, நீர் மற்றும் ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலில் ஏகாக்கிர சித்தத்துடன் - ஒரே மனநிலையில் பாபா சிபாரிசு செய்த மாதிரி தியானம் செய்யத் தொடங்கினார். தியானம் செய்யத் தொடங்கிய சில நாட்களிலேயே பலராமுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. பொதுவாக ஞானம் என்பது சமாதி நிலையிலோ அல்லது தியானத்திலோ தான் கை கூடும். ஆனால், பலராமுக்கு சாதாரண நிலையிலேயே ஞானம் பளிச்சிட்டது.
    சுபாஷ்பத்ரிஜி உபதேசித்த தியான முறையில் மிக எளிமையானது. அதில் தந்திரமோ, மந்திரமோ, யந்திரமோ கிடையாது. யாரும் தியானம் செய்யலாம் என்பதே அவர் காட்டிய வழி. அது பிரமிட் தியான வழி.
    பாபா இப்போது காட்டும் சாயி தியான வழியோ அதையும் விட எளிமையானது.
    உருவத்தில் இருந்து அருவத்திற்குப் போகும் வழியே சாயி தியானம்.    
    உருவத்தை - குறிப்பாக, பாபா உருவத்தை மனதில் நிறுத்தி தியானிக்கும் போது ஞானம் எப்படி சித்திக்கும்? அது அங்கேயே அப்படியே நிலை கொண்டிருக்குமோ? என்று ஒரு சந்தேகம் தோன்றவே செய்தது.
    அதற்கு பாபா தரும் பதில் """"எனது இயல்புகளை எண்ணி தியானம் செய்’’!
                                                -
--------------------------------------------------------------------------------------------------------------

சுபாஷ்பத்ரிஜியின் தியான வேள்வி

09,10,11. JULY .2011 அன்று காஞ்சிபுரத்தில்   PYRAMID SPIRITUAL SOCIETIES MOVEMENT சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற தியான யக்யத்தில் ஸ்ரீ சாயிமார்க்கம் ஆசிரியர் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன் பங்கேற்றார்.



தியானம் பற்றிய பத்ரிஜியின் பேச்சைக் கேட்க 
இங்கேசுபாஷ் பத்ரிஜி தியானம்  கிளிக் [ CLICK ] செய்யவும் 

 சுபாஷ் பத்ரிஜியிடம் நான் பார்த்து பிரமித்த அம்சம் அவரது சத்தியப்பூர்வமான எளிமை.குருவிற்கும் சீடனுக்கும் இடையே வித்தியாசம் கிடையாது என்பதற்காக சீடன் காலிலும் விழுந்து வணங்கும் அற்புத குணம் உடையவர் பத்ரிஜி.
இரண்டாவது அவரது பெயருக்கு அவர் கூறும் விளக்கம்:
" என் அம்மா அப்பா வைத்த பெயர் தான் முக்கியமே தவிர நானே என் பெயரை
சுவாமி ஸ்ரீ ஆனந்தா என்கிற வகையில் மாற்றிக் கொள்ளக் கூடாது.

பத்ரிஜி புல்லாங்குழல்



காஞ்சிபுரத்தில் தியானம் பற்றி அவர் தமிழில் பாடிய  இசை இன்னும் என் காதுகளில்.அந்த இனிய நாதத்தை நீங்களும் கேட்டு ஆனந்தமடைய
இங்கே  பத்ரிஜி புல்லாங்குழல்.கிளிக் [ CLICK ] செய்யவும்










No comments: