Wednesday 6 April 2011

பாபாவின் உபதேசம்

பாபாவின் அறிவுரைகளும், பயிற்சி முறைகளும் வித்தியாசமானவை. குறிப்பிட்ட வரையறை அல்லது இலக்கணம் இல்லாதவை. இதற்கு முன் எப்போதும் இல்லாத வரையிலானது. சிலருக்கு நேரடியாக அளித்தார். சிலருக்கு மறைமுகமாக குறிப்பால் அளித்தார். ஒரு சிலருக்கு கனவில் தோன்றி காட்சிகளாய் தந்தார். குரு பிரம்மா  போன்ற மந்திரங்களையும் உபதேசித்தார். ஹடயோகம் பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவரை அதை அப்படியே நிறுத்தும் படியும், பொறுமையே அதையும் விட முக்கியமானது என்றும் அறிவுரை கூறியும் இருக்கிறார். தொடர்ந்து படிக்க இங்கே  கிளிக் செய்யவும்..........சாயிதியானம்

சுபாஷ் பத்ரிஜி பாடிய தமிழ்ப் பாடல்

சுபாஷ் பத்ரிஜிக்கு தியானத்துடன் புல்லாங்குழல் வாசிக்கவும் தெரியும்.அழகு தமிழில் நன்றாக பாடவும் தெரியும். அவர் தியானம் பற்றி தமிழில் பாடியதைக் கேட்க ... பார்க்க பத்ரிஜி தமிழ்ப் பாடல் இங்கே கிளிக் செய்யவும்

தியான தீக்‌ஷை
தியாஅஅ
காஞ்சிபுரம் தியான யக்னத்தில் சுபாஷ் பத்ரிஜியை சந்தித்து தியான தீக்‌ஷை பெறுவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவருடன் இருந்த பொழுதும் அவர் எனக்கு பிரமிட் அளித்து கூறிய ஆசியும் நான் பெற்ற பேறு.
அன்று அவர் ஆற்றிய உரையைக் கேட்க சுபாஷ் பத்ரிஜி  இங்கே கிளிக் செய்யவும்

Thursday 31 March 2011

பாபா

கடவுளிடம் பேசும் கவிதைகள்

கடவுளிடம் பேச முடியுமா என்று கேட்டால் சாயிபாபாவைப் போன்ற ஒரு கடவுளிடம் கட்டாயம் பேசமுடியும் என்பேன்.நான் அப்படி பேசியிருக்கிறேன்.
அவரும் என்னோடு பேசியிருக்கிறார்.அவருடனான அந்த சந்திப்புகளை விளக்க வார்த்தைகள் போதாது.அவை கவிதைகளாகியுள்ளன.அவற்றைப் படிக்க மேலே கிளிக் செய்யவும்.




ராமானந்த சரஸ்வதி ஆசியுரை


 மதுரை ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரி பீடம், சுவாமி ராமானந்த சரஸ்வதி புதுக்கோட்டை கோபால கிருஷ்ண பாகவதரின் பேரர். சஞ்சீவி பாகவதரின் இரண்டாவது மகன். சன்யாசம் பெற்றுக் கொண்ட இவர், நித்ய பஜனை, ராதாகல்யாணம், பாகவத மேளா என்று நாமசங்கீர்த்தனமும் செய்து வருகிறார்.அவரது ஆசியுரை இது:


   
  
  ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலருக்கு ஆசிரியர் எஸ். லெக்ஷ்மி நரசிம்மன், ஆசிர்வாதக்கட்டுரை ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்ட போது, எனக்கு அவரைப்பற்றியும், அவரை சிறிய வயது பையனாகப் பார்த்ததும் தான் உடனே  ஞாபகத்துக்கு வந்தது.
    அதற்கு முன் என் பூர்வாசிரம தாத்தாவும், தந்தையுமான குருமகான்கள் கோபால கிருஷ்ண பாகவதருக்கும், சஞ்சீவி பாகவதருக்கும்  சாயி பாபாவிற்குமான பக்தித் தொடர்பை சொல்ல வேண்டியி ருக்கிறது.
    புதுக்கோட்டையில் கோபால கிருஷ்ண பாகவதர் நரசிம்ம ஜெயந்தியை ஆரம்பித்து வைத்து அமோகமாக நடத்தி வந்த காலம். எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற பிரபலங்கள் எல்லாம் அங்கு வந்து பாடியிருக்கிறார்கள். அப்படி வந்த பல்வேறு முக்கியஸ்தர்களில் மயிலாப்பூர் சாயி சமாஜ நிறுவனர் நரசிம்ம சுவாமிஜியும் ஒருவர்.
    பின்னாட்களில் நரசிம்ம சுவாமிஜியின் மறைவுக்குப் பிறகு, அப்போது சாயி சமாஜ  காரியதரிசி யாக இருந்த எஸ்ஸெஸ் போன்றவர்கள் கோபால கிருஷ்ண பாகவரை அணுகி மயிலாப்பூர் சாயி சமாஜத்தில் ராதா கல்யாணம் நடக்க ஏற்பாடு செய்தனர். அது இன்றளவும் தொடர்வது சாயி பகவா னின் கிருபையே. அதன்பிறகு, சஞ்சீவி பாகவதரும் சாயி சமாஜத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
    ஷிர்டி சாயி பாபாவிற்கும், பாகவத தர்மமான நாமசங்கீர்த்தனத்திற்கும் எப்போதுமே ஒரு வித தொடர்பு உண்டு என்பதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஷிர்டிபாபாவே கால்களில் கலங்கை கட்டி நடனம் ஆடியதுண்டு. அந்த வகையில் தான், கோபால கிருஷ்ண பாகவதர், சஞ்சீவி பாகவதர் ஆகிய சிட்டுக்குருவிகளை பாபா தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.
    அந்த பாரம்பரியத்தில் பாபாவின் பாதங்களில் ஒண்டிக் கிடக்கும் மூன்றாவது சிட்டுக் குருவி தான் அடியேன். அது ஒரு கூடுதல் புண்ணியம்.
    ஆசிரியர் எஸ்.லெக்ஷ்மி நரசிம்மன் பூர்வாசிரமத்தில் எனக்கு உறவினர். இப்போது எங்கள் இருவருக்கும் இடையிலான ஒரே பந்தம் சாயி பந்தம் தான்.
    அவர் சின்ன வயது பையனாக இருந்தபோது, புதுக்கோட்டையில் நான் நடத்தி வந்த சரஸ்வதி சங்கீத வித்யாலயாவில் அவரும் ஒரு மாணவர்.அவர் அப்போது என்னிடம் மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொண்டார்.அமைதியான முகபாவத்தோடு இருக்கும் சுபாவம் அவருக்குண்டு.
    அவர் அப்பா சுப்பிரமணியன் (குஞ்சுசார்) தீவிர பக்தர். நரசிம்ம ஜெயந்தியின் போதும், சாதா ரண நாட்களிலும் அவர் செய்து சேவைகள் அளப்பரியது. ஆசிரியரின் அம்மா சுப்புலெக்ஷ்மி அம்மாள் அதற்கு மேல். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தன் கையால் சமைத்துப் பரிமாறி புண்ணியம் சேர்த்துக் கொண்டவர்.
    லெக்ஷ்மி நரசிம்மன் ஆசிர்வாதக் கட்டுரை கேட்டதும் இதெல்லாம் தான் உடனே ஞாபகத்துக்கு வந்தன.அப்போது, அவர் என்னிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டாரே தவிர, பக்தியிலும் பஜனையிலும் ஈடுபாடு இல்லாதவராகவே இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியினரோடு சேர்ந்து சுவாமி கும்பிடாமலேயே இருந்தார்.
    2002 ஆம் ஆண்டு, புதுக்கோட்டையில் நரசிம்ம ஜெயந்திக்கான லக்னபத்திரிகை எழுதும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஸ்ரீ சாயி மார்க்கம் ஆரம்பிக்கப்படவில்லை. அப்படி ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கப் போவதாகக் கூறி திடீரென லெக்ஷ்மி நரசிம்மன் வந்து நின்ற போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் சாயி பாபாவின் லீலை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
    பாகவதர் பூஜித்து வந்த ஷிர்டி சாயி பாபா தங்க விக்ரஹம்  புதுக்கோட்டை சன்னதியில் உண்டு. அந்த பாபாவிடம் ஸ்ரீ சாயி மார்க்கம் பற்றி அப்போது பிரார்த்தனை செய்து கொண்டதும் ஞாபகத் துக்கு வருகிறது.
    இந்த தீபாவளித் தருணத்தில் பாபாவிடமும், பாகவத குருமகான்களிடமும் ஸ்ரீ சாயி மார்க்கம்  தழைத்தோங்கி அதன் ஆசிரியரும்,  அவரது குடும்பமும் அமோகமாக  வாழவேண்டும் என பிரார்த்தித்து ஆசிர்வாதம் செய்கிறேன்.
    ஸ்ரீ சாயி மார்க்கம் வாசகர்களும்  எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாங்கு வாழ சாயி நாதரிடம் பிரார்த்திக்கிறேன். சாயிராம்.
    

ஷிர்டிபாபாவின் 11 உபதேச மொழிகள்

 ஷிர்டிபாபாவிடம் நான் கவரப்பட்டதற்கான முதல் காரணம் இந்த 11 உபதேச மொழிகள்.காப்மேயர்,நெப்போலியன் ஹில் முதற்கொண்டு நம் ஊர் எம்.எஸ்.உதயமூர்த்தி வரை படித்துப் படித்தே வாழ்க்கையின் சவால்களை சந்தித்து வரும் எனக்கு பாபாவின் இந்த வாக்குறுதிகள் நம்பிக்கை வார்த்தைகளாக மட்டும் இன்றி நம் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அப்பாவின் வார்த்தைகளாகவும் உள்ளன.அவற்றை முழுமையாய்க் காண  பாபா 11 மொழிகள் இங்கே கிளிக் செய்யவும்


Sunday 27 March 2011

Thursday 24 March 2011

ஸ்ரீ சாயி மார்க்கம் புத்தகங்கள் வெளியீட்டு விழா